www.garudabazaar.com

'பத்து' பொருத்தமும் பக்காவா இருக்கு... 'மீம்' போட்டு பாராட்டும் நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் அரக்கர்கள் Vs அரச குடும்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் அரக்கர்கள் குடும்பத்தின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தி இருந்தார். அரச குடும்பத்தின் மன்னராக வேல்முருகன் அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி, சோமசேகர், ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம் பெற்றனர்.

Samyuktha won hearts of Fans with her Beautiful Attitude

அரக்கர்கள் குடும்பத்தில் ஆஜித், ஷிவானி, கேப்ரியலா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இடம் பெற்றனர். அரக்கர்கள் குடும்பம் தொந்தரவு செய்ய வரும்போது அரச குடும்பத்தில் இருந்து ஒருவர் சென்று சிலையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் வரை தாக்குப்பிடித்தால் அவர்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். இல்லையெனில் அரக்கர்கள் குடும்பத்தினருக்கு அடிமையாக இருக்க வேண்டும்.

இந்த டாஸ்க் சற்று விறுவிறுப்பாகவே இருந்தது. குறிப்பாக இந்த ராஜ உடையில் சம்யுக்தாவை பார்க்கும்போது பாகுபலி படத்தின் தேவசேனா போலவே இருப்பதாக ரசிகர்கள் மீம் போட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சம்யுக்தா தற்போது படிப்படியாக ஸ்கோர் செய்ய ஆரம்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samyuktha won hearts of Fans with her Beautiful Attitude

People looking for online information on Samyuktha Karthik will find this news story useful.