நேற்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் சற்று வித்தியாசமாக நடந்தது. தீபாவளி வருவதால் அனைவரின் புகைப்படங்களையும் வெடிகள் போல நிற்க வைத்து அதன் மேலே வெடிமருந்தை பிக்பாஸ் வைத்திருந்தார். நடுவில் சோளப்பொறி வடிவில் பெரிய மத்தாப்பு ஒன்றை வைத்து யாரை நாமினேட் செய்கிறீர்களோ அவர்கள் புகைப்படத்தில் இருந்து ஒரு கரண்டி மருந்தை எடுத்து போடுங்கள் என தெரிவித்து இருந்தார்.

அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு பேரை வரிசையாக நாமினேட் செய்தனர். இந்த வாரம் கிட்டத்தட்ட அனைவருமே இந்த பட்டியலில் இடம் பிடித்தனர். ஆனால் பிக்பாஸ் தீபாவளி வருவதால் எவிக்சன் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து போட்டியாளர்களின் வயிற்றில் பால் வார்த்தார். இதைக்கேட்டு அனைவரும் சந்தோஷமாக ஆடிப்பாடினர். நாமினேஷன் படலத்தின் போது சம்யுக்தா, அனிதா மற்றும் சனம் இருவரையும் நாமினேட் செய்தார்.
Samyuktha nominating the moonthrikotte sisters. 😂 #BiggBossTamil4
— Paradox (@trexmax20) November 9, 2020
அப்போது அவர் இருவருக்கும் 'முந்திரிக்கொட்டை' சிஸ்டர்ஸ் என பெயர் வைத்து நாமினேட் செய்தார். மேலும் இருவரும் சேர்ந்து ஆரிக்கு ஜால்ரா போடுவதாகவும் தெரிவித்தார். முன்னதாக பாலாஜி, சனமை முந்திரிக்கொட்டை என அழைத்து அது பெரிய பிரச்சினையாக மாறியது. இப்போது மீண்டும் சம்யுக்தா திரி கொளுத்திப்போட்டு இருக்கிறார். இது எப்போது பெரிதாக வெடிக்க போகிறது? என தெரியவில்லை.