www.garudabazaar.com

Video: பிக்பாஸில் சர்ப்ரைஸ் 'எண்ட்ரி' கொடுத்த சமந்தா... எகிறிப்போன TRP!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது சூடுபிடித்துள்ளது. இதேபோல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் படு சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது. தமிழில் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

Samantha Akkineni turns host for Bigg Boss 4 Telugu,

இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆடல், பாடலுடன் சமந்தா எண்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போன்ற ப்ரோமோ ஒன்று நேற்று வெளியானது.

அதில் தசரா ஸ்பெஷலாக சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமந்தாவின் மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனா 'வைல்ட் கார்ட்' என்ற படத்தின் படப்பிடிப்புக்காக சென்றுள்ளார். அங்கிருந்து அவரால் திரும்ப முடியாத சூழல் நிலவுவதால் அவருக்கு பதிலாக சமந்தா பிக்பாஸ் தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இது மட்டுமின்றி வரும் நாட்களில் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் ஸ்பெஷல் கெஸ்டாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சீசனில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சில நாட்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

VIDEO: பிக்பாஸில் சர்ப்ரைஸ் 'எண்ட்ரி' கொடுத்த சமந்தா... எகிறிப்போன TRP! வீடியோ

Samantha Akkineni turns host for Bigg Boss 4 Telugu,

People looking for online information on Bigg Boss 4 Telugu will find this news story useful.