Video: பாவாடை தாவணியில் 'செம' டான்ஸ்... அப்படியே 'அவங்கள' மாதிரி இருக்காங்க!
முகப்பு > சினிமா செய்திகள்பிரேமம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை சாய் பல்லவி தமிழில் தியா படத்தின் வழியாக அறிமுகமானார். தொடர்ந்து அவரது நடிப்பில் மாரி 2, என்ஜிகே படங்கள் வெளியாகின. இதில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மொழி தாண்டி அதிகமான ரசிகர்களால் யூடியூபில் பார்க்கப்பட்டு ரெக்கார்டு படைத்தது.

கதைக்கு முக்கியத்துவம் அளித்து படங்களை செலக்ட் செய்து வரும் சாய் பல்லவி தற்போது லவ் ஸ்டோரி, விராட பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரது தங்கை பூஜா கண்ணன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர்.
சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தாவணி, பாவாடையில் இவர் ஆகியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக டான்ஸை விட அவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள் மனதை கொள்ளை கொள்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
VIDEO: பாவாடை தாவணியில் 'செம' டான்ஸ்... அப்படியே 'அவங்கள' மாதிரி இருக்காங்க! வீடியோ