www.garudabazaar.com

இயக்குநருக்கு நன்றி சொன்ன செல்வராகவன்!!.. 'சாணிக் காயிதம்' படத்தோட அடுத்த செம்ம அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக பெரும் ரசிகர் பட்டாளத்தையே தன்னகத்தே கொண்டவர்.

Saani Kaayidham update selvaraghavan thanked director செல்வராகவன்

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில், ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கி வரும் செல்வராகவன், பல வருடம் முன்பு, தனுஷ் நடிப்பில் புதுப்பேட்டை திரைப்படத்தை இயக்கியதற்காக, தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.

Saani Kaayidham update selvaraghavan thanked director செல்வராகவன்

நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படத்தை இயக்கி இருந்த செல்வராகவன் கடைசியாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இயக்குனராக மட்டுமே இருந்த செல்வராகவன் நடிகராகவும் புதிய அவதாரத்தில் தோன்றி இருக்கிறார்.

Saani Kaayidham update selvaraghavan thanked director செல்வராகவன்

ஆம், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் அறிமுக நடிகராக நடிக்கும் திரைப்படம் சாணி காயிதம். நடிகை கீர்த்தி சுரேஷூடன் செல்வராகவன் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து இருப்பதாகவும், இது ஒரு இன்கிரிடிபிள் பயணம் என்றும் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும் அந்த பதிவில் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு செல்வராகவன் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திலும் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஷால் பிறந்த நாளில் ‘வேற லெவல் டைட்டிலுடன்’ வெளியான ஃபர்ஸ்ட் லுக்!!

தொடர்புடைய இணைப்புகள்

Saani Kaayidham update selvaraghavan thanked director செல்வராகவன்

People looking for online information on Arun Matheswaran, Keerthi Suresh, SaaniKaayidham, Selvaraghavan will find this news story useful.