Video : ''ஃபீஸ் கட்டலன்னு தொரத்துனாங்க.., காசு இல்லாம படிப்பை...'' - கலங்கும் ரோஜா சீரியல் பிரியங்கா.
முகப்பு > சினிமா செய்திகள்ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா தனது வாழ்வில் சந்தித்த போராட்டங்கள் குறித்து கண் கலங்கி நம்மிடம் பேசியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள சீரியல் ரோஜா. இத்தொடரில் கதாநாயகி ரோஜாவாக நடிப்பவர் பிரியங்கா நல்காரி. இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர, இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது திரைப்பயணம் குறித்து நம்மிடம் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் சிறுவயதில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் உருக்கமாக பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, ''அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆன சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை. ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம். ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்த நாட்களும் உண்டு. என் ஸ்கூல் பீஸுக்கு பணம் இல்லாமல் துரத்தப்பட்டேன். பிறகு அதனால் படிப்பையும் பாதியில் நிறுத்தினேன்'' என கண் கலங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை பிரியங்கா பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ.
VIDEO : ''ஃபீஸ் கட்டலன்னு தொரத்துனாங்க.., காசு இல்லாம படிப்பை...'' - கலங்கும் ரோஜா சீரியல் பிரியங்கா. வீடியோ