IndParty
www.garudabazaar.com

உங்க டீம்லயே ஒரு 'கருப்பு' ஆடு இருக்குதே பாலாஜி... 'குறும்படம்' போட்ட ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எவ்வளவு பேசியும் ஜித்தன் ரமேஷ் சிக்காத வெறுப்பில் இருந்த ஆரி நேற்று கேப்ரியலாவை பேசி வெறுப்பேற்ற முயற்சி செய்தார். நீங்க இந்த ஷோவுக்கு 'அன்பிட்' உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை சொல்லியும் கூட கேபி அசைந்து கொடுக்கவில்லை. ஆரி சொன்ன வார்த்தைகளால் உடைந்து போயிருந்த கேபியை தனியே அழைத்து அர்ச்சனா, நிஷா ஆகியோர் ஆறுதல் படுத்தினர்.

Rio Raj consolation for Gabriella, Netizens reacts

அப்போது அந்த இடத்தில் நின்ற ரியோ உன்ன காப்பாத்த நாங்க ரொம்ப டிரை பண்ணோம். நீதான் சிரிக்கவே இல்லை. சிரிச்சிருந்தா ஒரு ஹார்ட்டோட அனுப்பி இருப்போம் என தன்னுடைய பிளானை சொன்னார். பதிலுக்கு அர்ச்சனா நீங்க ஒரு ஹார்ட்டை எடுப்பீங்க. ஆரி ஒரு ஹார்ட்டை எடுப்பாரு என கோபமாக சொன்னார். மேலும் பாலாஜி தான் உங்க லீடர் எனவும் சொன்னார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி டீம்ல இருந்துகிட்டு இப்படி எதிரணி ஜெயிக்க தீயா வேலை செய்றீங்களே பாஸ். கூட்டத்துல ஒரு கருப்பு ஆடு நீங்க தான் போல என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் ரியோ சொன்ன பிளானை வீடியோ  எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். அப்போ இந்த டாஸ்க் முடிஞ்சதும் எக்கச்சக்க கண்டெண்ட் காத்திருக்கு போல!

தொடர்புடைய இணைப்புகள்

Rio Raj consolation for Gabriella, Netizens reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.