Reliable Software
www.garudabazaar.com

மீண்டும் வெயிட்டான சீரியல் மூலம் களம் இறங்கும் அண்ணியார்... என்ன சீரியல்...எந்த சேனல்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரேகா கிருஷ்ணப்பா, என்பதை விட அண்ணியார் என்ற கதாபாத்திரத்துக்கு அறிமுகமே தேவையில்லை. சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சீரியலில் நடிக்க வரும் ரேகா உற்சாகமாக இருக்கிறார். அண்ணியார் கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் இவர். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்த அவர், தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்கி விட்டார். ரேகா கிருஷ்ணப்பா நடிக்கும் புதிய சீரியலை பிரபல இயக்குனர் குமரன் இயக்குகிறார். குமரன் ஏற்கனவே தென்றல், தெய்வமகள், நாயகி என பல வெற்றிப் சீரியல்களை இயக்கியவர்.

Rekha Krishnappa return with a news serial மீண்டும் களம் இறங்கும் அண்ணியார்

இந்நிலையில் ரேகா கிருஷ்ணப்பா நடித்து வரும் புதிய சீரியல் 'தமிழும் சரஸ்வதியும்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரேகாதவிர, தென்றல் புகழ் தீபக் திங்கர் மற்றும் நாயகி புகழ் நாக்ஷாத்ரா நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த புதிய சீரியல் ஏப்ரல் மத்தியில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது. தனது அடுத்த சீரியல் பற்றிய தகவலை  பகிர்ந்து கொண்ட ரேகா கிருஷ்ணப்பா, "அதே குழுவினர் விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

Rekha Krishnappa return with a news serial மீண்டும் களம் இறங்கும் அண்ணியார்

People looking for online information on Rekha Krishnappa will find this news story useful.