www.garudabazaar.com

இதெல்லாம் பார்த்தா 'ஆரியே' வருத்தப்படுவாரு... 'ரம்யா' பாண்டியனின் சகோதரர் வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பது போட்டியாளர்களுடன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று அர்ச்சனா வெளியேறிய நிலையில் பாலாஜி வீட்டின் புதிய கேப்டனாகி இருக்கிறார். அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த வார நாமினேஷனில் இருந்து அவர் எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷன் சடங்கு மிகவும் உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ramya Pandian's brother request to Aari fans, goes viral

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஆரி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், '' எனது சகோதரி ரம்யா பாண்டியன் குறித்து மோசமான கருத்துக்கள் பலவற்றையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. சகோதரர் ஆரி அர்ஜுனனின் ரசிகர்கள் தான் இவ்வாறு செய்கின்றனர். இது ஆரி அர்ஜுனன் சாருக்கு தெரிய வந்தால் அவர் தன்னுடைய ரசிகர்கள் குறித்து நிச்சயம் மகிழ்ச்சி அடைய மாட்டார்.

அவரின் சமூக செயல்பாடுகளால் நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்துங்கள். அதற்காக மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அந்த கண்ணோட்டத்துடன் இந்த நிகழ்ச்சியை பாருங்கள். ரம்யாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது ரசிகர்களுக்கு நன்றி,'' இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதெல்லாம் பார்த்தா 'ஆரியே' வருத்தப்படுவாரு... 'ரம்யா' பாண்டியனின் சகோதரர் வேண்டுகோள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian's brother request to Aari fans, goes viral

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.