www.garudabazaar.com

நான் ஒண்ணும் 'அதுக்காக' இங்க வரல... 'தெறிக்க' விட்ட ரம்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று ரியோ பேசியதை கேட்டு சனம், ரம்யா, அனிதா ஆகியோர் கூட்டணி அமைத்து ரியோவை தாக்கினர். இதில் ஷிவானி, சம்யுக்தா இருவரும் இணைந்து கொண்டது தான் ஹைலைட். ஏற்கனவே நொந்து போய் இருக்காரு என நினைத்தாரோ என்னவோ ஆரி பெரும்பாலும் ரியோவுக்கு ஆறுதலாகவே பேசினார். இடையில் அர்ச்சனா புகுந்தும் வேலைக்கு ஆகவில்லை. அனைத்தையும் பார்த்து பாலா மட்டும் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்.

Ramya Pandian given a befitting answer for Rio Raj

ரியோ, ஆஜீத்திடம் சொல்லி வைத்து பேசியது சனமிற்கு கோபமாக அமைந்து விட்டது. அதேபோல தன்னையும், அனிதாவையும் குறித்து அவர் நக்கலடித்ததாகவும் நினைத்து விட்டார். தொடர்ந்து ரம்யா, அனிதா, சனம் என முப்பெரும் தேவிகளும் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அனிதாவை கிச்சன் டீமில் இருந்து தூக்கி பாத்திரங்கள் கழுவும் அணியில் போட்டது, கேப்ரியலாவை வைஸ் கேப்டன் ஆக்குவதாக சொல்லி பின்னர் ஷிவானியை, ரியோ வைஸ் கேப்டன் ஆக்கியது ஆகிய விஷயங்களை அலசி ஆராய்ந்தனர்.

இதுகுறித்து ரம்யா, ரியோவிடம் கேள்வி எழுப்ப அவர் நான் அனைவரிடமும் சொல்லிவிட்டு தான் செய்தேன். உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அப்போதே தெரிவித்து இருக்கலாம் என்றார். பதிலுக்கு ரம்யா நான் அப்போது சொன்னேன் ஆனால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். மேலும் சமைக்க தெரியாதவங்க இருந்தப்போ கிச்சன் டீம்ல இருந்து கரெக்ட் டைமுக்கு சாப்பாடு வந்தது என ரியோ சொல்ல, நான் ஒண்ணும் குக்கிங் கத்துக்கறதுக்கு பிக்பாஸ் வரல என நெத்தியடியாக சொல்லி விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ரம்யா மீண்டும் ஆட்டத்திற்குள் வந்து விட்டார் என அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் ஆரி, பாலாஜி, சனம், ரம்யா, அனிதா இவர்கள் ஐவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது பிக்பாஸின் தாரக மந்திரம் என்பதால் யார் இறுதிவரை தாக்கு பிடிப்பார்கள் என்பதை காத்திருந்து பார்க்கலாம்!

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian given a befitting answer for Rio Raj

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.