www.garudabazaar.com

அவங்கள விட 'ஆரி' எந்த விதத்துல 'கொறைஞ்சு' போய்ட்டாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று காலர் டாஸ்க்கில் ஷிவானி போன் செய்து ரம்யா பாண்டியனுக்கு பேசினார். அப்போது ஷிவானி ரம்யா பாண்டியனிடம் பைனல்ஸ்க்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கும் 5 பேரை இப்போது சொல்லுங்கள் என கேட்டார். பதிலுக்கு ரம்யா தன்னுடைய பெயரை முதலில் சொன்னார். தொடர்ந்து பாலாஜி முருகதாஸ், சோம், ஷிவானி, ரியோ ஆகிய 5 பேர்களை சொன்னார்.

Ramya Pandian and Shivani conversation, Netizens reacts

இதைப்பார்த்த ரசிகர்கள் சோம், ரியோ, பாலாஜியை விட ஆரி எந்தவிதத்துல கொறைஞ்சு போய்ட்டாரு? நாமினேஷன்ல தொடர்ந்து வந்தாலும் அவர் மொதல் ஆளா காப்பாற்றப்படுறாரு. அப்படி இருக்கும்போது நான் நடுநிலையா இருக்கேன்னு கமல் சார் முன்னாடி சொன்ன நீங்க பாலாஜி குரூப்ல இருந்து ரெண்டு பேரையும், அன்பு குரூப்ல இருந்து ரெண்டு பேரையும் சொல்லி கேம் ஆடுறீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருசிலரோ நீங்க சோம், ரியோ சொன்னத கூட எங்களால ஏத்துக்க முடிஞ்சது. ஆனா ஷிவானி என்ன பண்ணிட்டாங்கன்னு அவங்க பேரை இதுல சேர்த்தீங்க? என கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். இதைப்பார்த்த ஆரி ரசிகர்கள் அவங்க என்னைக்குமே ஆரிக்கு எதிரா தான் இருப்பாங்க. இது எங்களுக்கு எப்போவோ தெரியும் என தெரிவிக்க, பதிலுக்கு ரம்யா ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆரி ரசிகர்ளுடன் சண்டை போட்டு வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian and Shivani conversation, Netizens reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.