Jai been others
www.garudabazaar.com

VIDEO: அண்ணாத்த படம் பார்த்த ரஜினி! படம் முடிந்து கட்டிப்பிடித்த பேரன்! நெகிழ்ச்சியான தருணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Rajinikanth and His Grandson watched Annaaththe Movie

அண்ணாத்த’ படத்திற்கு U/A  தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, படத்தின் ஓட்ட நேரம்  2 மணிநேரம் 43 நிமிடங்கள்  என சென்சார் போர்டு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், டீசர், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Rajinikanth and His Grandson watched Annaaththe Movie

ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

Rajinikanth and His Grandson watched Annaaththe Movie

இந்த படம் தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு (27.10.2021) அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு ரஜினியின் பேரன் கட்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியாக ரஜினிகாந்த் Hoote சமூக வலைதளம் மூலம் குரல் பதிவாக பகிர்ந்துள்ளார். முழு குரல் பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

VIDEO: அண்ணாத்த படம் பார்த்த ரஜினி! படம் முடிந்து கட்டிப்பிடித்த பேரன்! நெகிழ்ச்சியான தருணம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth and His Grandson watched Annaaththe Movie

People looking for online information on Annaatthe, Rajinikanth will find this news story useful.