RRR Others USA
www.garudabazaar.com

வெப் சீரிஸ் பக்கம் கமல் பட இயக்குனர்.. தயாரிக்கப் போகும் ராதிகா.. நடிப்பு யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா தற்போது வெப் தொடர் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Rajesh M Selva to direct Web series starring Sarathkumar.

முன்னணி இயக்குனர்கள் வெப் தொடர் மற்றும் அந்தோலஜி இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவல் தொடங்கி ஊரடங்கு அறிவிக்கபட்ட நாள் முதல், வெளியே சென்று ஷூட்டிங் நடத்த முடியாமல் தவித்த இயக்குனர்களுக்கு புது வழியாக இருந்தது தான் வெப் தொடர். எபிசோடுகளாக வெளிவரும் வெப் தொடருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். வெப் தொடருக்கு பின்னர் அந்தோலஜி படமாகவும் இயக்க தொடங்கினர். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Rajesh M Selva to direct Web series starring Sarathkumar.

தற்போது பல பிரபல இயக்குனர்கள் அந்தோலஜி மற்றும் வெப் தொடர்கள் இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல இயக்குனர்களான கவுதம் மேனன், மணிரத்னம், போன்ற பலரும் அந்தோலஜி இயக்கி பிரமிப்பை ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் ராஜேஷ் எம் செல்வாவும் வெப் தொடர் இயக்க உள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நாம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தா.. சமந்தா போட்ட வைரல் பதிவு!

யார் இவர்

Rajesh M Selva to direct Web series starring Sarathkumar.

ராஜேஷ் எம் செல்வா, கடந்த 2015ஆம் ஆண்டு, கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், த்ரிஷாவை வைத்து  இயக்கிய படம் தூங்காவனம். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே  வரவேற்பு பெற்றது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்தார் . விக்ரம் நடித்து 2019ஆம் ஆண்டு வெளிவந்த கடாரம் கொண்டான் படத்தையும் ராஜேஷ் எம் செல்வா இயக்கினார். 

வில்லன்

Rajesh M Selva to direct Web series starring Sarathkumar.

இவர் விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாகவும், மற்றும் உத்தம வில்லன் படத்தில் ஸ்பையாகவும் (spy) நடித்திருந்தார்.  இந்நிலையில் ராஜேஷ் எம் செல்வா  புதிய வெப் தொடர்  இயக்க போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த வெப் தொடருக்கு "இறை" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொடரில் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்தத் தொடரை ராடான் மீடியா வொர்க்ஸ் ராதிகா சரத்குமார் தயாரிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். இந்த வெப் தொடர் பிரமாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Rajesh M Selva to direct Web series starring Sarathkumar.

People looking for online information on கமல், ராஜேஷ் எம் செல்வா, வெப் சீரியஸ், Rajesh M Selva, Sarathkumar, Thoongavanam, Web Series will find this news story useful.