Reliable Software
www.garudabazaar.com

"என் வெற்றிப் படங்களின்....!".. பிரபலத்தின் திடீர் மரணம்.. சல்மான் கான் கண்கலங்க வைக்கும் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரைத்துறையினை போலவே பாலிவுட்டிலும் அடுத்தடுத்து கலைஞர்களின் மரண சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில், பாலிவுட்டின் 80கள் முதலே புகழ்பெற்ற இசையமைப்பாளராக விளங்கிய ராம் லக்‌ஷ்மன் மறைவு செய்தி பலரையும் உருக்கமடையச் செய்துள்ளது.

Raam Laxman dies Salman Khan, Lata Mangeshkar tribute

1942ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்த இசையமைப்பாளர் லக்‌ஷ்மனின் இயற்பெயர் விஜய் பாட்டீல். ஆனால், சினிமா உலகத்தில் இரட்டை இசையமைப்பாளர்களாக ராம் மற்றும் லக்‌ஷ்மன் இருவரும் கலக்கினார். இவரது நண்பர் ராம்(சுரேந்திரா) என்பவர் 1976ம் ஆண்டு மறைந்துவிட்டார். எனினும் தொடர்ந்து ராம்லக்‌ஷ்மன் எனும் பெயரிலேயே இவர் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

1975ம் ஆண்டு வெளியான பாண்டு அவல்தார் எனும் மராத்தி படத்திற்கு இசையமைத்து திரைத்துறையில் அறிமுகமான லக்‌ஷ்மன், தொடர்ந்து இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் வெளியான சுமார் 75 படங்களுக்கு ராம்லக்‌ஷ்மனாக இசையமைத்துள்ளார். இவற்றுள் பெரும்பாலும் எஸ்.பி.பியை பாடவைப்பதை வழக்கமாகவும் கொண்டவர் லக்‌ஷ்மன் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சல்மான் கானின் மெயின் பியார் கியா, பதார் கே புல், ஹம் சாத் சாத் ஹைன், ஹம் அப்கே ஹைன் கவுன் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத் புகழ்பெற்றவர். இந்த நிலையில் தான் இசையமைப்பாளர் ராம்லக்‌ஷ்மன் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இதனிடையே ராம்லக்‌ஷ்மன் தனது வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் என நடிகர் சல்மான் கான் உருக்கமான பதிவை தம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் இந்த துயரில் இருந்து மீண்டு வரவும் பிரார்த்திப்பதாகவும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மாதுரி தீக்‌ஷித், லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோரும் ராம் லக்‌ஷ்மன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ALSO READ:  "எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி".. பாடகி ஸ்ரேயா கோஷல் வீட்ல நல்ல விஷயம்.. உருக்கமான ட்வீட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raam Laxman dies Salman Khan, Lata Mangeshkar tribute

People looking for online information on Radhe, Salman Khan will find this news story useful.