"அதனால தான் நீ ஜெயிக்க மாட்ட..".. பிரபல போட்டியாளரை பார்த்து சொன்ன குயின்சி ? bigg boss 6 tamil
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்பு வெளியேறிய போட்டியாளர்கள் பலர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதன் காரணமாக கலந்து சில எபிசோடுகள் மிகவும் கலகலப்பாகவும் அதே வேளையில் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் எந்த போட்டியாளர் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்வையாளர்கள் பலரும் கணித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் Finale குறித்து அமுதவாணன் விக்ரமன், குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஃபினாலேவுக்கு முன்னேறுபவர்கள் பெயரை அமுதவாணன் கூறுவதாக தெரிகிறது. அப்போது அவர் விக்ரம், ஷிவின், அசிம் உள்ளிட்டோர் பெயரை தெரிவிக்க, தனது பெயரையும் அவர் கூற முற்பட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் பேசும் குயின்சி, "நம்ம பேரையே போட வேண்டாம், Finale இல்ல. டிக்கெட் டூ Finale" எனக் கூறியதுமே "கடவுள் இருக்கான் குமாரு" என அமுதவாணன் தெரிவிக்கிறார்.
அப்போது"அதனாலதான் நீ ஜெயிக்க மாட்டேன்னு சொல்றேன்" என அமுதாவானனை குறிப்பிட்டு சிரித்துக்கொண்டே குயின்ஷி பதிலும் கூறுகிறார். இதனிடையே எலிமினேட் ஆன போட்டியாளர்கள் சொன்ன கருத்து பற்றி கமல் கேட்டபோது சொன்ன அமுதவாணன், “சிலர் சொல்லும் நெகடிவான கமெண்ட்ஸ் கொஞ்சம் பயமாவும் இருக்கு” என தெரிவித்தார். அதற்கு கமலோ, “அவற்றையும் நீங்கள் சென்சிடிவாக எடுத்துக் கொள்ளாமல் கேஷூவலாக எடுத்துக்கொள்வது சிறப்பு” என வெகுவாக பாராட்டினார்.