www.garudabazaar.com

அல்லு அர்ஜூன் நடிக்கும் 'புஷ்பா' படத்தின் LATEST அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா'.

pushpa movie latest update on first single song

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

pushpa movie latest update on first single song

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

pushpa movie latest update on first single song

பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நேரத்தில், தயாரிப்பாளர்கள் தற்போது அப்டேட்டை கொடுத்துள்ளனர்.

pushpa movie latest update on first single song

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஆகஸ்ட் 13 அன்று, தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு மொழிகளில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

pushpa movie latest update on first single song

முதல் சிங்கிள் பாடலை விஷால் தத்லானி, விஜய் பிரகாஷ், ராகுல் நம்பியார், சிவம் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் பாடுகிறார்கள்.

pushpa movie latest update on first single song

இன்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

pushpa movie latest update on first single song

People looking for online information on Allu Arjun, Devi sri prasad will find this news story useful.