www.garudabazaar.com

அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா நடிக்கும் PAN INDIA புஷ்பா திரைப்படத்தின் Third Single! புதிய POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா'.

pushpa movie allu arjun rashmika mandana DSP 3rd single

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும்.

pushpa movie allu arjun rashmika mandana DSP 3rd single

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

pushpa movie allu arjun rashmika mandana DSP 3rd single

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் இரண்டு சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலயில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் 'சாமி சாமி' பாடல் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி காலை 11:07 மணிக்கு வெளியாகிறது.

pushpa movie allu arjun rashmika mandana DSP 3rd single

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ரிலீசை முன்கூட்டியே வெளியிட படக்குழு முடிவு செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

pushpa movie allu arjun rashmika mandana DSP 3rd single

People looking for online information on Allu Arjun, Dervi Sri Prasad, Fahad Faasil, Rashmika Mandana will find this news story useful.