புனித் Hospital-க்கு நெஞ்சுவலியில் கிளம்பிய பரபரப்பு Video.. வெளியான CCTV காட்சிகள்!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் சகோதரரும், நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தி அனைவரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இளையராஜா, அர்ஜூன், சிவகார்த்திகேயன், நாசர், விஷால் என தமிழ் சினிமாவில் பலரும் புனித்தின் மரணம் கண்கலங்க வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். பலரும் நேரில் சென்று புனித்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அவருக்கு அரசுமுறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இதில் கர்நாடக முதல்வர் கலந்துகொண்டார்.
உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட மாரடைப்பால், மருத்துவமனை சென்ற புனீத், பின்னர் தனியார் மருத்துவமனையான விக்ரம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் பிழைத்து வரவேண்டி ரசிகர்கள் கதறினர். எனினும் துரதிர்ஷ்டவசமாக புனித் உயிரிழந்தார்.
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார், நெஞ்சுவலியால் Hospital-க்கு கிளம்பி செல்லும் பரபரப்பு வீடியோக்கள் CCTV காட்சிகளாக வெளியாகி ரசிகர்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோவில் மிகவும் இயல்பாக, தன் காரில் ஏறி புனித் மருத்துவமனைக்கு செல்லக் கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
புனித் HOSPITAL-க்கு நெஞ்சுவலியில் கிளம்பிய பரபரப்பு VIDEO.. வெளியான CCTV காட்சிகள்! வீடியோ