www.garudabazaar.com

LATEST: ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் பீம்லா நாயக் படத்தின் அடுத்த தெறி மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமை பல மொழிகளில் விற்கப்பட்டது. அதில் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் நாக வம்சி கைப்பற்றினார். மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் உருவாகி வருகிறது.

PSPK Bheemla Nayak Telugu Movie Next Mass Update

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை நித்யா மேனனும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் அலுமினியம் தொழிற்சாலையில் 26.07.2021 அன்று ஆரம்பமானது.

PSPK Bheemla Nayak Telugu Movie Next Mass Update

இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். ரவி கே சந்திரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.PSPK Bheemla Nayak Telugu Movie Next Mass Update

PSPKRana என அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் பெயர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 9.45க்கு Glimpse வீடியோ மூலம் "பீம்லா நாயக்"  என படத்தின் தயாரிப்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தனர்.

PSPK Bheemla Nayak Telugu Movie Next Mass Update

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளிவந்துள்ளது. படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமன் இசையில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் (பொங்கல்) மஹாசங்கராந்திக்கு ஜனவரி 12 அன்று வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

PSPK Bheemla Nayak Telugu Movie Next Mass Update

People looking for online information on Ayyappanum Koshiyum, Pawan Kalyan, S Thaman will find this news story useful.