இளம் பெண் கொடுத்த கற்பழிப்பு புகார்.. 'பிரபல TV Anchor வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!".
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னிடம் 140-க்கும் அதிகமான ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் சிலரும் இருப்பதாக விவாதங்கள் கிளம்பின. மேலும் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட F.I.R-ல், தெலுங்கு டிவி சானலில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ப்ரதீப் மச்சிராஜுவின் பெயரும் இருப்பதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் தற்போது தொகுப்பாளர் ப்ரதீப் ஒரு பரபரப்பு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''பல செய்தி நிறுவனங்களும் யூடியூப் சேனலும் என் மீது தவறான குற்றசாட்டை முன் வைக்கிறார்கள். என் போட்டோவை பயன்படுத்துகிறார்கள். இவை எல்லாம் ஆதரமற்றவை. இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால் எங்களுக்கு ஏதாவது ஆனால், யார் பொறுப்பு. சோஷியல் மீடியா வலிமையான ஆயுதம். ஆனால், அதை சிலர் இப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள். தேவையில்லாமல் என்மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சொல்வபர்கள், ட்ரோல் செய்பவர்கள் என அனைவரையும் நான் சும்மா விட மாட்டேன்'' என அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இளம் பெண் கொடுத்த கற்பழிப்பு புகார்.. 'பிரபல TV ANCHOR வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!". வீடியோ