www.garudabazaar.com

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை இந்த அரசியல்வாதியின் வாரிசா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடித்த படம் 'பட்டாஸ்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மெஹ்ரின். இந்நிலையில்   நடிகை மெஹ்ரின் பிர்ஸாடாவுக்கு இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெறஉள்ளது. ஹரியானாவின் காங்கிரஸ் தலைவர் பவ்யா பிஷ்னோய் தான் அவரது காதலர். இவர் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன். மார்ச் 12-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் பிரபல தேசிய நாளிதழ் ஒன்றில் பேசிய நடிகை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள கோட்டை ஒன்றில் இந்த விழா நடைபெறும் என்று கூறினார். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.

Popular tamil actress to get married soon தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம்

திருமணத்திற்கு பிறகு மெஹ்ரீனின் படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை. தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா பாட்டியா ஆகியோர் இணைந்து நடிக்கும் 'எப்3' என்ற மிகப்பெரிய படம் இவர் கைவசம் இருக்கிறது. 26 வயதான இந்த நடிகை 2016-ல் 'கிருஷ்ணா காதி வீர பிரேம கதா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 'மகானுபவுடு', 'ராஜா தி கிரேட்', 'F2' போன்ற படங்கள் இவரது மற்ற வெற்றிப் படங்கள். பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் தலா ஒரு படம் நடித்துள்ளார். முன்னாள் மாடல் நடிகையான இவர் சில விளம்பரங்களிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Popular tamil actress to get married soon தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம்

People looking for online information on Mehreen Pirzada will find this news story useful.