கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை.... குவியும் வாழ்த்துக்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். வில்லி வேடங்களில் புகுந்து விளையாடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமடைந்தார். தற்போது பூவே உனக்காக என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் வாணி ராணி, செம்பருத்தி, அரண்மனை கிளி போன்ற தொடர்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஸ்ரீதேவி அசோக் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் காதலர் தினத்தையடுத்து பிரபலங்கள் பலரும் தங்கள் துணையுடன் புகைப்படம் வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது கணவருடன் புகைப்படம் வெளியிட்டு 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.