நடிகர் ராஜ்கமல் - லதா ராவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்கள்... வியக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அபியும் நானும்' என்ற சீரியல் தற்பொழுது குடும்ப பெண்கள் மற்றும் சிறுவர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் அபி மற்றும் நிதிஷ் என்ற இரு சிறுவர்கள் நடித்து வருகின்றனர். அதில் அபியின் வளர்ப்பு தந்தையாக நடிப்பவர் பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமல். 2003ஆம் வருடம் டிவியில் நடிகராக அறிமுகமாகிய ராஜ்கமல் பல தொடர்களில் நடித்துள்ளார். அது தவிர சரோஜா, லிங்கா, நவீன சரஸ்வதி சபதம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சீரியல் நடிகை லதா ராவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபல நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை லதா ராவும் சீரியல்களின் மூலம் பிரபலமானவர் தான். தமிழில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது பல திரைபடங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஜெயம் ரவியின் தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களுக்கு லாரா,ராகா என்று இரு மகள்கள் இருக்கின்றனர். சமீபத்தில் தனது மகள்களுடன் நடிகர் ராஜ்கமல் பாவாடை அணிந்து குஷியாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இன்றும் இளம் தம்பதி போல் இருக்கும் ராஜ்கமல் லதா ராவ் தம்பதியினருக்கு இவ்வளவு பெரிய மகள்களா என்றுவியந்து ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.