RIP - பிரபல இளம் மலையாள இயக்குனர் மரணம் அடைத்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்2020ஆம் வருடத்தில் பல கொடுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயல்பான வாழ்க்கைக்கு முதல் எதிரியாக நுழைந்தது கொரோனா வியாதி. அதே போல் திரைத்துறை பிரபலங்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள இயக்குனரான ஷாநவாஸ் தனது 37வது வயதில் தற்போது மரணமடைந்துள்ளார். மலையாள சினிமாவில் 'கரி' என்ற படத்தை முதன் முதலில் உருவாக்கிய அவருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஜெயசூர்யாவை ஹீரோவாக வைத்து 'சூபியும் சுஜாதாவும்' என்ற படத்தை இயக்கினார். இதில் அதிதி ராவ் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக அந்த படத்தை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்ததற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டாலும், எல்லாவற்றையும் மீறி வெற்றிகரமாக வெளியிட்டார். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இருந்த அவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர. இந்நிலையில் அவர் இன்று இயற்கை எழுதியுள்ளார். அவரது மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Director Who Was Declared Brain Dead Passes Away - Film Stars In Shock Ft Naranipuzha Shanavas, Sufiyum Sujathayum Director
- இயக்குநர் நாரனிபுழா ஷாநவாஸ் கவலைக்கிடம் | Sufiyum Sujathayum Director Naranipuzha Shanavas Admitted After Cardiogenic Shock
- Aditi Rao Hydari And Jayasurya’s Sufiyum Sujathayum Director Naranipuzha Shanavas Is Critical And On Ventilator Support