www.garudabazaar.com

பிரபல ஹீரோவுக்காக கட் அவுட் வைக்கும் போது கரண்ட் ஷாக் அடித்து பலியான 3 ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் மற்றும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே கட் அவட் வைக்கப்பட்ட முற்பட்ட மூன்று இளைஞர்கள் கரண்ட் ஷாக் அடித்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular hero's thress fans die of electroduction ft Pawan Kalyan | பிரபல ஹீரோவுக்கு கட் அவுட் வைக்கும் போது மூன்று நடிகர்கள் மரணம்

இந்த சம்பவத்தில் மேலும் சிலர் படுகாயமைடந்ததாக கூறப்படுகிறது. இரும்பு கம்பியால் அமைக்கப்பட்ட அந்த பேனர் வைக்கும் போது அருகில் வயரில் பட்டு இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Popular hero's thress fans die of electroduction ft Pawan Kalyan | பிரபல ஹீரோவுக்கு கட் அவுட் வைக்கும் போது மூன்று நடிகர்கள் மரணம்

இதனையடுத்து பவன் கல்யாண் தற்போது நடித்துள்ள வக்கீல் சாப் படக்குழுவினர் பலரும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வக்கீல் சாப் படத்தயாரிப்பாளரான போனி கபூர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கனத்த இதயத்துடன் இறந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை இதன் மூலம் அறிவிக்கிறோம்.

படுகாயமைடந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறோம். மேலும் தங்களின் உயிருக்கு மதிப்பளித்து பாதுகாப்பாக இருக்கும்படி ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Popular hero's thress fans die of electroduction ft Pawan Kalyan | பிரபல ஹீரோவுக்கு கட் அவுட் வைக்கும் போது மூன்று நடிகர்கள் மரணம்

People looking for online information on Pawan Kalyan, Vakkeel Saab will find this news story useful.