Reliable Software
www.garudabazaar.com

செம்பருத்தி சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபல முன்னாள் ஹீரோ நடிகர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும்  சீரியல் 'செம்பருத்தி'. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் கார்த்திக் ராஜ், ஷபானா, சூரியவம்சம் புகழ் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர்.

popular hero joins sembaruthi serial செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர்

இந்நிலையில் கடந்த வருடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி  சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறும் பொழுது " சீக்கிரமே சீரியல் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த சீரியலில் ஒருவரை மாற்ற வேண்டுமென்றால். நான் ஆதியை தான் சொல்வேன். அவருக்கு சீரியலில் நடிக்க பெரிதாக ஆர்வமில்லை என்று நினைக்கிறேன். அவர் சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே அவர் ஆசைப்பட்டபடி சினிமாவுக்குச் சென்று, வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைத்தால் இன்னும் நலமாக இருக்கும்" என்று கூறியிருந்தார். அவர் கூறிய படியே சில மாதங்களில் கார்த்திக் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு தொகுப்பாளரான அக்னி அதில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது புகழ் பெற்ற நடிகர் மற்றும் கதாசிரியரான லிவிங்ஸ்டன் இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல பூவே பூச்சூடவா சீரியலிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Livingston

popular hero joins sembaruthi serial செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர்

People looking for online information on Livingston will find this news story useful.