படப்பிடிப்பின் திடீரென மரணமடைந்த பிரபல காமெடி நடிகர் - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்க, அவர்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் மரணம் அவர்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது. கடந்த சில மாதங்களில் திரையுலகைச் சேர்ந்த இர்ஃபான் கான், சுஷாந்த் சிங், சிரஞ்சீவி சார்ஜா, வடிவேலு பாலாஜி உள்ளிட்டோரின் மரணம் குறித்த தகவல்கள் மக்களிடையே மிகவும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலலையில் கன்னட திரையுலகைச் சேர்ந்த காமெடி நடிகர் ராக்லைன் சுதாகர் நேற்று (23/09/2020) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் காமெடி, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ளார்.
புதுப்படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட உடல்நலம் பாதிப்பினால் அவதிப்பட்டுள்ளார். முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முற்றிலும் குணமான பிறகே அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். முன்பாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.