www.garudabazaar.com

சோகமான நிலைமையில் பிரபல நடிகை... உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ... கலங்க வைக்கும் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி, பிளாக் பண்டி போன்ற பலர் நடித்திருந்த படம் அங்காடித் தெரு. தி நகர் ரங்கநாதன் தெருவில் வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தவர் நடிகை சிந்து.

Popular angadi theru actress affected by cancer சோகமான நிலைமையில் பிரபல நடிகை

கொரோனா காரணமாக திரைதுறை சார்ந்தவர்களும், பொது மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில், தன்னால் முடிந்த உதவிகளை அவர் தொடர்ந்து மக்களுக்கு செய்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் முதுகுத் தண்டிலும் கேன்சர் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடிகர் பிளாக் பாண்டி சிந்துவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு திரைத்துறை சார்ந்த சிலர்  உதவி உதவி செய்துவரும் நிலையில். மிகவும் கடினமான இந்த சூழ்நிலையில் அவர் உதவி கேட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்ய வேண்டும் எனபதே அனைவரின் ஏக்கமாய் உள்ளது.

சோகமான நிலைமையில் பிரபல நடிகை... உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ... கலங்க வைக்கும் பதிவு..! வீடியோ

Popular angadi theru actress affected by cancer சோகமான நிலைமையில் பிரபல நடிகை

People looking for online information on Actress sindhu, Black pandi will find this news story useful.