www.garudabazaar.com

RIP - பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் மரணம்... பிரபலங்கள் இரங்கல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் பிரபல நடிகை ஜெயசித்ரா. 70 மற்றும் 80- களில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சிவகுமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

actress jeyachithra husband passes awayநடிகை ஜெயசித்ரா வீட்டில் சோகம்

ஜெமினி கணேசன் நடிப்பில் குறத்தி மகன் படத்தில் அறிமுகமான இவருக்கு, கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படம் சிறந்த அடையாளமாக அமைந்தது. பிறகு கமல்ஹாசனின் சொல்லத்தான் நினைக்கிறேன், பணத்துக்காக, பட்டாம்பூச்சி, மாமன் மகள், புதுபுது அர்த்தங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பிரபல நடிகை ஜெயசித்ரா அவர்களின் கணவரும்,  இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்களின் தந்தையுமான திரு. கணேஷ் அவர்கள் திருச்சியில் இன்று காலமானார். அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

actress jeyachithra husband passes awayநடிகை ஜெயசித்ரா வீட்டில் சோகம்

People looking for online information on Jeyachithra will find this news story useful.