Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

சூட்டிங்கின் போது கீழே விழுந்த பிரபல நடிகை... திடீர் பரபரப்பு... அவரே வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018-ஆம் ஆண்டு யூ டியூப்பில் வெளியான ஒரு வீடியோவின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். அந்த சிறிய கண் சிமிட்டும் வீடியோ பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்தது. பலரும் அதேபோல டிரை செய்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டதையும் பார்க்க முடிந்தது. அந்த வீடியோ மலையாள திரைப்படமான 'ஒரு அடார் லவ்' என்ற படத்தில் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்து முடித்த தெலுங்கு படமான செக் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து உள்ளது.

popular actress face minor accident in sets கீழே விழுந்த பிரபல நடிகை

அப்பொழுது நடிகை பிரியா வாரியருக்கு சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ஓடிவந்து நடிகர் நிதின் முதுகில் ஏற வேண்டிய சீனில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே படக்குழுவினர் அவருக்கு உதவி செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவை நடிகை பிரியா வாரியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நிதின், ரகுல் பிரீத் சிங், பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த செக் திரைப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூட்டிங்கின் போது கீழே விழுந்த பிரபல நடிகை... திடீர் பரபரப்பு... அவரே வெளியிட்ட வீடியோ..! வீடியோ

மேலும் செய்திகள்

popular actress face minor accident in sets கீழே விழுந்த பிரபல நடிகை

People looking for online information on Priya Varrier will find this news story useful.