www.garudabazaar.com

பிரபல நடிகர் சுட்டு கொலை.. காதலி வீட்டின் முன்பு சோகம்.. இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டு நாளுக்கு நாள் துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் 2020-ம் ஆண்டின் சூழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு துக்க செய்தி வெளியாகியுள்ளது.

Popular actor shot infront of girlfriends house பிரபல நடிகர் சுட்டு கொலை

புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமான "தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட்"  என்ற படத்தில் நடித்த நடிகர் எடி ஹேசல் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலியை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர், வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Popular actor shot infront of girlfriends house பிரபல நடிகர் சுட்டு கொலை

People looking for online information on Eddie Hassell will find this news story useful.