பிரபல நடிகரை வீட்டிற்கு வெளியில் சரமாரியாக தாக்கிய கும்பல்.. தலையில் காயம்.! - பின்னணி என்ன.?!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகரை சில பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியதில், நடிகர் காயமடைந்துள்ளார்.
பாலிவுட் சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகர் அன்ஷ் பாக்ரி. இவர் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த Dil Toh Happy Hai ji எனும் சீரியலில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் தற்போது Vellampanti எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அன்ஷ் பாக்ரியின் வீட்டிற்கு வெளியில் வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் தனது அம்மா, மற்றும் சகோதரியுடன் தங்கியுள்ள அன்ஷ் பாக்ரி, புதிதாக ஒரு வீட்டையும் கட்டி வந்துள்ளார். இதற்காக அவர் பணியமர்திய கான்ட்ராக்டருக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. முழுமையாக வேலையை முடிக்காமல், கான்ட்ராக்டர் ஏமாற்றி வருவதை அறிந்த அன்ஷ், அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு கான்ட்ராக்டரை வைத்து, வீட்டு வேலைகளை தொடங்கியிருக்கிறார்.
இதை தொடர்ந்து அந்த கான்ட்ராக்டர் தனது அம்மாவையும், தங்கையையும் மிரட்டியதாக அன்ஷ் காவல்துறையில் புகாரளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை, சுமார் பத்து பேர் கொண்ட கும்பல், நடிகர் வீட்டுக்கு வந்து அவரை வெளியில் அழைத்துள்ளனர். அப்போது அந்த கான்ட்ராக்டரும் அங்கு இருக்க, அந்த கும்பல் அன்ஷ் பாக்ரியை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அவருக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு காவல்துறையினர் வந்து அவரை மீட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் நடந்த பொழுது, எங்கள் அக்கம் பக்கத்தினர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர், ஒரே ஒரு வயதான பெரியவர் மட்டுமே உதவ வந்தார். இதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது. மேலும், நான் ஷூட்டிங்கிற்கு மும்பை சென்றுவிட்டால், தனியாக இருக்கும் எனது தாய் மற்றும் சகோதரியின் பாதுகாப்பு குறித்து எனக்கு பயம் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.