பூஜா ஹெக்டாவிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்... நடிகை வெளியிட்ட போட்டோவை பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுடன் 'முகமூடி' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பிறகு அவர் பாலிவுட்டில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தெலுங்கில்  அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அவர் நடித்த அலா வைகுந்தபுரம்லோ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட போம்மா என்ற பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் அவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டார்.

Pooja hedge savage reply to worst fan ரசிகருக்கு பூஜா ஹெக்டே நெத்தியடி பதில்

தற்போது தெலுங்கில் நடிகர் பிரபாஸுடன் ஒரு படமும், ஹிந்தியில் சல்மான்கான், ரன்வீர் சிங் என டாப் ஹீரோக்களுடன் பிசியாக நடித்து  வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் 'உங்களின் நிர்வாண புகைப்படத்தை பதிவிடுங்கள்' என்பது போல கேட்டுள்ளார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் பூஜா ஹெக்டே ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் தனது கால்களைப் பதிவிட்டு போதுமா என்பது போல அவர் பதிலளித்துள்ளார். ஒரு நடிகையோ அல்லது எந்த பெண்ணிடமும் தவறாக நடந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்கு இப்படி தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Pooja hedge savage reply to worst fan ரசிகருக்கு பூஜா ஹெக்டே நெத்தியடி பதில்

People looking for online information on Pooja Hedge will find this news story useful.