மூளைக்கு சவாலான விளையாட்டுகளில் ஒன்று ரூபிக் க்யூப் புதிர். ஆனால், சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி சாரா அதில் கில்லியாக திகழ்கிறார்.

இவர் கண்களை கட்டிக்கொண்டு வெறும் 2 நிமிடம் 7 நொடிகளில் புதிரை தீர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மின்னல் வேகத்தில் புதிரை விடுவிக்கும்போதே வைரமுத்துவின் கவிதை ஒன்றை மனப்பாடமாக ஒப்பித்த சாராவின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இது கவிப்பேரரசின் பார்வைக்கு எட்ட உடனடியாக சாரவை அவர் நேரில் சந்தித்தார். 1ம் வகுப்பு படித்துவரும் சாரா விரைவில் உலகப்புகழ் அடைவார் என வைரமுத்து மனதார வாழ்த்தினார்.
மேலும், வைரமுத்துவின் முன்னிலையில் சாரா கண்களை கட்டியவாறு கவிதை பாடியபடி ரூபிக் க்யூப் புதிரை விடுவித்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த வீடியோவை வைரமுத்து தன் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
வளர்பிறையை வாழ்த்துகிறேன்..@CubeTamilnadu #Sharah #AmmaKavithaihttps://t.co/F8WFRDegqL
— வைரமுத்து (@vairamuthu) November 27, 2019
கின்னஸ் சிறுமிக்கு வைரமுத்து வாழ்த்து வீடியோ