www.garudabazaar.com

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. OTT-ல் ரிலீஸா.?! - டைரக்டர் என்ன சொல்கிறார்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஆன்லைனில் வெளியாவது குறித்து புதிய தகவல் தெரிய வந்துள்ளது. 

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு OTT-ல் வருகிறதா.?! | actress shakila's biopic to be released in OTT platform

சினிமா நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தற்போது உருவாகி வரும் ஷகிலா பயோபிக் திரைப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா ஷகிலாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பங்கஜ் திரிபாதி, ராஜீவ் பிள்ளை நடிக்கும் இத்திரைப்படத்திற்கு வீரா சம்பத் இசையமைத்துள்ளார். 

இதனிடையே இத்திரைப்படம் குறித்து இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் கூறியதாவது, ''இத்திரைப்படம் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மேலும் படத்தில் ஒரு வலிமையான கருத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறோம். சென்சார் வேலைகள் முடிந்து படம் தியேட்டர்களில் வெளியாக தயாராக இருக்கிறது. அதே சமயத்தில் OTT -ல் ரிலீஸ் செய்யும் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் செய்யும் திட்டமும் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு OTT-ல் வருகிறதா.?! | actress shakila's biopic to be released in OTT platform

People looking for online information on Indrajith Lankesh, Netflix, Richa Chadda, Shakila, Shakila Biopic will find this news story useful.