ஒரு சட்டை ஒரு பல்பம்.. காஞ்சனா 3-ன் கலர்ஃபுல் கானா பாடல் வீடியோ இதோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் ‘ஒரு சட்டை ஒரு பல்பம்’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

Oru Sattai Oru Balpam official video song from Raghva Lawrence's Kanchana 3 has been released

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.

அதன் வரிசையில் தற்போது உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘ஒரு சட்டை ஒரு பல்பம்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. டூ-பா-டூ இசையமைத்துள்ள இப்பாடலை ‘சாரவெடி’ சரண் எழுதி பாடியுள்ளார்.

ஒரு சட்டை ஒரு பல்பம்.. காஞ்சனா 3-ன் கலர்ஃபுல் கானா பாடல் வீடியோ இதோ.. வீடியோ