www.garudabazaar.com

திரும்பவும் மாஸா வராரு.. 90S Kids ஃபேவ்ரைட் கோலங்கள் டைரக்டரின் புது சீரியல்.. எப்போ எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை 04, பிப்ரவரி 2022:- பெருவாரியான மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்கி வருபவை சின்னத்திரை சீரியல்கள்.

new serial in popular tv channel by Kolanagal director

90S சீரியல்கள்

தொலைக்காட்சி தொடங்கிய காலத்திலிருந்தே சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சீரியல்களாக 90-களின் காலகட்டத்தில் வெளிவந்த நிறைய சீரியல்களை குறிப்பிடலாம்.

இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியல்கள்

அவற்றிலும் சன் டி.வி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்கள் பலவும் நட்சத்திர சீரியல்களாக மக்கள் இன்றும் மக்கள் நினைவில் நீங்காமல் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவை பலவும் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியல்களாக மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் நம்பிக்கைக்கு துணை நிற்கும் சீரியல்களாக, அவர்களை மோட்டிவேட் பண்ணும் சிரியல்களாக இருந்தன.

ஸ்டார் சீரியல்கள்

கோலங்கள் சீரியலில் தேவயானி, தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணன், சித்தி சீரியலில் நடிகை ராதிகா என்று பல முன்னணி நடிகைகள் சீரியல்களில் களமிறங்கி நடித்து வந்தார்கள். ஆனால் இன்றும் வெள்ளித்திரையிலும் உச்ச நட்சத்திரங்களாகவே ஜொலித்து வருகின்றனர். 

கோலங்கள் திருச்செல்வம்

அப்படி ஒரு முக்கியமான சிரியலான கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தற்போது மீண்டும் சன் டி.வியில் இயக்கும் சீரியல் எதிர்நீச்சல். தன் குடும்ப பெண்களை போலவே சாதனை பெண்ணாக துடிக்கும் ஒரு இளம் பெண்ணை சுற்றி இந்த கதை பயணிப்பதாக ப்ரோமோவில் குறிப்பிடப் படுகிறது. இந்த சீரியலை இயக்கும் திருச்செல்வம் மெட்டி ஒலி சீரியலில் நடித்தவர்.

ஆம், 2002ஆம் ஆண்டு சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான மெஹா ஹிட் சீரியலான மெட்டி ஒலி சீரியலில் இணை இயக்குனராக பணியாற்றியவர் திருச்செல்வம். பிறகு கோலங்கள் தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக பிரபலம் ஆனார். மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்த இந்த தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

எதிர்நீச்சல்.. புதிய பாய்ச்சல்..

பின்னர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் கோலங்கள் சீரியலில் தொல்ஸ் என்கிற தொல்காப்பியன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது பெண்களை உற்சாகப்படுத்தும் பெண்ணிய நோக்கிலான இந்த எதிர்நீச்சல் சீரியலை இயக்குகிறார். 

எப்போது எதுல?

இந்த சீரியலில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான ஹரிப்பிரியா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொகுப்பாளினியாக கலக்கி வந்த பிரியதர்ஷினி (டிடியின் அக்கா பிடி) மற்றும் மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த சீரியல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read: சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் பிரபல அஜித் பட நாயகி எண்ட்ரி.. மாஸ் ப்ரோமோ

தொடர்புடைய இணைப்புகள்

new serial in popular tv channel by Kolanagal director

People looking for online information on Ethirneechal, Kolangal, Sun TV Serial, Sun TV Serial Promo, ThiruSelvam, Tv Serial will find this news story useful.