www.garudabazaar.com

அங்க எல்லாரும் 'தப்பிக்க' போராடிட்டு இருந்தப்போ... 'KGF மீம்' போட்டு ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று வழக்கம்போல டாஸ்க்குகளை யாரெல்லாம் சிறப்பாக செய்தனர் என பிக்பாஸ் கேட்டார். இதில் ரம்யா, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மூவரும் தேர்வாகினர். அடுத்த வாரம் கேப்டன் பதவிக்கு இவர்களில் ஒருவர் தான் தேர்வாவார். பாலாஜி, ஜித்தன் ரமேஷ் இருவருமே இதுவரை கேப்டன் ஆனதில்லை. இதனால் பாலாஜி, ரமேஷ் இருவரில் ஒருவர் கேப்டன் ஆவார்களா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Netizens wanted Aari Arjunan crossed one crore votes

அதோடு மோசமாக பெர்பார்ம் செய்த இருவரை ஜெயிலுக்கு அனுப்பும் பணியும் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் பலரும் தங்களது சொந்த பிரச்சினைகளை வைத்து ஒருவருக்கு ஒருவர் நாமினேட் செய்து கொண்டனர். ஆரி, ரியோவுக்கு ஏராளமான வாக்குகள் கிடைத்தன. நிஷாவுக்கும் கிடைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் நிஷாவை காப்பாற்ற யாரெல்லாம் விரும்புகிறீர்கள்? என கேட்டு அர்ச்சனா, நிஷாவை காப்பாற்றி விட்டார்.

இதையடுத்து ஆரி, ரியோ இருவரும் ஜெயிலுக்கு சென்றனர். வைஸ் கேப்டன் ஜெயில் கதவை திறந்து விடும் வேலையை பெருமையாக ஏற்று கொண்டார். இந்த நிலையில் ரசிகர்கள் kGF படத்தில் இருந்து மீம் ஒன்றை போட்டு ஆரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக ஆரி ரசிகர்களால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காப்பாற்றப் படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens wanted Aari Arjunan crossed one crore votes

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.