www.garudabazaar.com

'நீங்க' படிச்ச ஸ்கூல்ல நான்... வேற லெவல் 'ரமேஷை' கொண்டாடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று நடைபெற்ற ரோபோட் டாஸ்க்கில் பாலாஜி அணியினர் தீயாக வேலை செய்து அர்ச்சனா அணியை சேர்ந்த ரோபோக்களை டென்ஷன் ஆக்கினர். குறிப்பாக நிஷா, அர்ச்சனாவை எமோஷனல் ஆக்க வேண்டும் என சென்டிமெண்டை வைத்து கொஞ்சம் இறங்கி விளையாடினார். ஆனால் அது அவருக்கு எதிராகவே திரும்பி விட்டது. இதனால் நிஷா தனியாக அமர்ந்து அழுதார்.

Netizens liked Jithan Ramesh's Smart move against Rio

அப்போது அங்கு வந்த ரியோ ஏன் இந்த கண்ணீரை வேஸ்ட் பண்ற, ஆரி ரொம்ப நேரமா முயற்சி செய்தும் ரமேஷ் அசைஞ்சு கொடுக்கல. அதனால நீ போய் ரமேஷ்க்கு சப்போர்ட் பண்ற மாதிரி ஆரிக்கிட்ட சண்டை போடு என செம ஐடியா ஒன்றை கொடுத்தார். இதைக்கேட்ட நிஷா ஆவேசமாக சென்று ஆரியிடம் ஏன் அவரை இப்படி டார்ச்சர் பண்றீங்க? என கேள்வி மேல் கேள்வி கேட்டார். ஆனால் ரமேஷ் சற்றுகூட அசைந்து கொடுக்கவில்லை.

தன்னுடைய ரோபோ பாத்திரமாகவே அவர் மாறியிருந்தார். இதற்கிடையில் ஆரி களைத்துப்போய் எழுந்து செல்ல, ரியோ தனியாக சென்று ரமேஷிடம் என்ன ஆச்சு ப்ரோ? என பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார். ஆனால் ரமேஷ் அப்போதும் ரோபோ பாணியிலேயே பதில் சொல்லி ரியோ வீசிய தூண்டிலில் மாட்டிக் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜித்தன் ரமேஷ் ஆர்மியில் தற்போது வேகமாக இணைந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens liked Jithan Ramesh's Smart move against Rio

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.