www.garudabazaar.com

ரோட்டு கடையில் நயன்தாரா.. “விலையை குறைச்சு குடுங்கண்ணே!”.. பேரம் பேசும் வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார்.

Nayanthara talking buying bag to street vendor viral video

விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வரும் நயன்தாரா விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வரும் நயன்தாரா பெண் மைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளான மாயா, டோரா, இமைக்கா நொடிகள், அறம் தொடங்கி அண்மையில் ஓடிடியில் வெளியான ‘நெற்றிக்கண்’ வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்ரனின் ‘கோல்டு’, அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் இணையும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடித்து உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இவர், ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் காதலில் இணைந்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பல ஆன்மிக தலங்களுக்கு சென்று வருகிறார்கள். முன்னதாக திருப்பதி சென்ற இவர்கள், அண்மையில் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவில், மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவில், மகாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் என சென்று வழிபட்டுள்ளனர்.

அப்படி செல்லும்போது ஒரு ரோட்டோர கடையில் நயன்தாரா பேரம் பேசி ஒரு Bag-ஐ குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு, வியாபாரியிடம் இயல்பாக கேட்டு வாங்கும் வாடிக்கையாளராக வைரலாகியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த பலரும், மக்களோடு மக்களாக எவ்வித பகட்டும் இல்லாமல் சாலையோர கடைவாசியிடம் பேரம் பேசி பொருள் வாங்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக நயன்தாரா நடந்துகொண்டதற்காக நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara talking buying bag to street vendor viral video

People looking for online information on நயன்தாரா ரோட்டுக்கடை பேரம், Lady super star, Nayanthara, Nayanthara actress, Trending, Viral video will find this news story useful.