www.garudabazaar.com

"அவங்களோட relationship-ல இருக்கீங்களா?".. ‘fans-ன் Viral கேள்வி..’ உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர் ‘ரவீனா தாஹா’.

mouna ragam salman says reel relationship with raveena

முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் நடித்த ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவி மௌன ராகம் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் முதன்மை கதாபாத்திரத்தில் சல்மான் நடிக்கிறார். இதனிடையே ரசிகர்களுடன் கேள்வி பதில் செஷனில் சல்மான் நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில், “உண்மையிலேயே நீங்களும் சக்தி (அல்லது) சத்யாவும் (நடிகை ரவீனா) ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா? உங்கள் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளதே?” என்று ரசிகர் ஒரு கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த சல்மான், “அதெல்லாம் இல்லைங்க.. ரீல் ரிலேஷன்ஷிப் மட்டும்தான்!” என்று பதிலளித்திருக்கிறார்.

இதேபோல் ரசிகர் ஒருவர் ரவீனா சிஸ்டர் பற்றியும் ராகுல் ப்ரோ பற்றியும் சில வார்த்தைகள் கூறுங்கள் என்று கேட்டதற்கு, “என் சந்தோஷம் (அவர்கள்)”  என பதில் அளித்திருக்கிறார். இதை மீண்டும் பகிர்ந்த ரவீனா, “ஸ்வீட்டி” என கமெண்ட் கொடுத்திருக்கிறார்.

இதேபோல், “பிறகு உங்களுக்கும் ரவீனா அக்காவுக்கும் என்னதான் ரிலேஷன்ஷிப்?” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு வீடியோவை பகிர்ந்து, “இந்த மாதிரி தொந்தரவு பண்ற ரிலேஷன்ஷிப் தான்” என்று காமெடியாக பதிலளித்திருக்கிறார். இதைப்பார்த்த ரவீனா, “அட.. இத எப்போ வீடியோ எடுத்தீங்க? உண்மைதான் உங்களை தொந்தரவு செய்யாமல் என்னுடைய நாள் முழுமை பெறாது” என்று பதிலளித்திருக்கிறார்.

இன்னொரு ரசிகர், “கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணுங்க சக்தி கூட..” என்று ரசிகர் சொல்லி இருக்கிறார். இதற்கு, “பண்ணுவோம்.. டைம் இருக்கு” என்று சல்மான் பதிலளித்திருக்கிறார்.

குறிப்பாக ரசிகர்களின் கேள்விகளுக்கு  “சிங்கிள்” என்றும் “தருண் எப்போதும் பாவம்.. என்னுடைய தம்பி” என்றும் தன் தம்பியாக நடிக்கும் சக நடிகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

மேலும், தனக்கு வரக்கூடிய வருங்கால மனைவி பற்றி கேள்விக்கு,  “என்னை நன்றாக புரிந்து கொண்டு சப்போர்ட் செய்தாலே போதும் சாமி” என்று பதிலளித்திருக்கிறார். மௌனராகம் 2-ஐ பொருத்தவரை தன்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இறுதியாக ஒரு ரசிகர் ஒரு படி மேலே போய், “ராகுலா? ரவீனாவா?..  இந்த இருவரில் யார் ஒருவரை பிடிக்கும்?” என்று கேட்டதற்கு சல்மான், “தம்பி ராகுல் தான்” என்பது போல் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, இந்த செஷனை நிறைவு செய்திருக்கிறார்.

"அவங்களோட RELATIONSHIP-ல இருக்கீங்களா?".. ‘FANS-ன் VIRAL கேள்வி..’ உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

mouna ragam salman says reel relationship with raveena

People looking for online information on Mounaraagam, Sathya, SathyaVarun, Trending, TVSerial, Varun, VijayTelevision will find this news story useful.