www.garudavega.com

Go Corona Go - தனக்கு நிகழும் கொடுமை பற்றி நடிகர் சிவா வெளியிட்ட Funny வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின் சினிமாவில் கால் பதித்தவர் நடிகர் சிவா. தமிழில் வெளியான முக்கியமான ஸ்பூஃப் படங்கள் பட்டியலில் இவர் நடித்த 'தமிழ் பட'த்துக்கு மறுக்க முடியாத இடம் உண்டு.

Mirchi Shiva tweets funny video on Quarantine | கொரோனா பற்றி நடிகர் மிர்ச்சி சிவா வெளியிட்ட காமெடி வீடியோ

தொடர்ந்து காமெடி கலந்த படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவர் சமீபத்தில் 'சுமோ' படத்தில் நடித்துள்ளார். ஆனால், கொரோனா பாதிப்பால் தற்போது சினிமா மற்றும் தியேட்டர் துறை முடங்கி விட்டதால் அனைத்து திரைப்பாங்ளின் ரிலீஸ் டேட்டும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சிவா ஒரு வீடியோ ஒன்றை தன் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதுபோல் அமைந்திருக்கும் அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

இதில் அவரை வீட்டில் பாத்திரம் துலக்கவும், துணி துவைக்கவும் அழைப்பது போல் காட்சி இடம்பெற்றிருக்கிறது. Fun வீடியோ என்றாலும் சிவா தன் ஸ்டைலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரிமைண்டராகவே இந்த வீடியோ அமைந்துள்ளது.

Entertainment sub editor