www.garudabazaar.com

பாரதிராஜா மகன் இயக்கும் முதல் படம்.. டைட்டில் லுக் போஸ்டருடன் வெளியான படக்குழு விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாரதிராஜா, மகன் மனோஜ் பாரதிராஜா, புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளார்.

Manoj Bharathi Raaja Margazhi Thingal movie announcement

தமிழ் சினிமாவின் திசைவழிப் போக்கை மாற்றிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் பாரதிராஜா. 'இயக்குனர் இமயம்' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோரை வைத்து தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களை இயக்கியவர்.

Manoj Bharathi Raaja Margazhi Thingal movie announcement

சமீப காலங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்து வரும் பாரதிராஜா, இளம் இயக்குனர்கள் இயக்கிய பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, கென்னடி கிளப் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம்  படத்தில் தனுஷ்க்கு தாத்தாவாக 'சீனியர் திருச்சிற்றம்பலம்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா, இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

இயக்குனர் சுசீந்திரனின் கதை & தயாரிப்பில் மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Manoj Bharathi Raaja Margazhi Thingal movie announcement

People looking for online information on Bharathi Raaja, Manoj Bharathi Raaja will find this news story useful.