"தெரியும்.. இது கஷ்டமான பயணம்!" - புற்றுநோய் தினத்தில் மனீஷா கொய்ராலாவின் நெகிழ்ச்சி பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை மனீஷா கொய்ராலா, தமிழ் சினிமாவில் பம்பாய், உயிரே, முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இந்திய நடிகை.
கடந்த 2012-ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தா நடிகை மனீஷா கொய்ராலா. பின்னர் அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு குணமடைந்தார். இதனையடுத்து தன் அனுபவங்களை தொகுத்து ஹீல்ட்: ஹவ் கேன்சர் கிவ் மீ எ நியூ லைஃப் என்கிற புத்தகமாக எழுதி, கடந்த ஜனவரி 8, 2018 அன்று வெளியிட்டார்.
அந்த புத்தகத்தில், நடிகை மனீஷா கொய்ராலா தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் நலம்பெற்று வருவது குறித்து எழுதியிருந்தார். இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனீஷா கொய்ராலா உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளன்று புற்றுநோயினாலான கடினமான பாதையில் இந்த பயணத்தை கடந்து செல்லக்கூடிய அனைவரையுமே நான் வாழ்த்த விரும்புகிறேன். எனக்குத் தெரியும் இந்த பயணம் கடினமானது என்று.. ஆனால் நீங்கள் அதை விட வலிமையானவர். இந்த பயணத்துக்கு துணிந்தவர்களுக்கு நான் மரியாதையை செலுத்தவும், இதில் வென்று வருபவர்களுடன் இணைந்து இப்பயணத்தை கொண்டாடவும் விரும்புகிறேன்.
இந்நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் முன்னெடுத்துச் சென்று அனைவரிடத்திலும் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு நாம், நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நமக்கும் இவ்வுலகிற்கும் நாம் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்துக்காகவும், நலமான வாழ்க்கைக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என மனீஷா கொய்ராலா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Manisha Koirala Is Among The Top Stars Of Indian Cinema
- Manisha Koirala On Why She Is Not Afraid Of COVID
- AR Rahman, Manisha Koirala, Ranjit Barot And Ehan’s 99 Songs Trailer Out
- Manisha Koirala Shares Her Favorite Film, Bombay’s Kannalane Song
- Cancer Taught Me To Value Life - Bombay Actress Manisha Koirala On Fighting Ovarian Cancer
- Manisha Koirala To Play Nargis Dutt’s Role In Sanjay Dutt’s Biopic
- Manisha Koirala's Uncle Sushil Koirala Passes Away
- Manisha Koirala’s Rebirth, Manisha Koirala, Cancer
- , Salman Khan, Manisha Koirala
- Manisha Koirala Is Out Of Danger Now. , Manisha Koirala, Manisha Koirala Cancer
- Manisha Koirala Diagnosed With Cancer ...
தொடர்புடைய இணைப்புகள்
- ஒரே அடில Knock Out 🔥 வர்மக்கலையின் Mass காட்டும் Real Indian தாத்தா Aasaan Rajendran
- இறக்கும் முன் பெண் DOCTOR போட்ட கடைசி பதிவு! - நடந்தது என்ன?
- Dhanush Sir-காக தான் அந்த கதை பண்ணேன், But NO சொல்லிட்டாரு - Vasanthabalan Breaks Untold Stories
- 25 ஆண்டுகள் கழித்தும் அந்தத் தீ அணையவில்லை! மணிரத்னத்தின் 'பம்பாய்' சொல்லும் சேதி இதுதான்!
- உயிரே (1998) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow
- Top Celebrities Who Fought Against Cancer | Inspiring Video
- Dibakar Banerjee | Lust Stories Review - Slideshow
- Mudhalvan | 150 All-Time Best Cult Tamil Films by Behindwoods | Part 02 - Slideshow
- Mudhalvan | 10 memorable political Tamil films that made people think - Slideshow
- Mudhalvan | Did you know Vijay missed these Big films? - Slideshow
- Mudhalvan | 8 Movie Titles which suit OPS after yesterday's revolt - Slideshow
- Mudhalvan | 10 Mass Interval Blocks - Slideshow