www.garudabazaar.com

Video : விஜய் டிவி புகழுக்கு சவால் விட்ட மதன் கௌரி... மேடையில் நடந்த கலாட்டா... மிஸ் பண்ணிடாதீங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

madan gowri challenges pugazh புகழுக்கு சவால் விட்ட மதன் கௌரி

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் 7.03.2021 அன்று  நடைபெற்ற பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றனர்.

இந்த விழாவில் The Behindwoods Gold Best Digital Content Creator என்ற விருதை பிரபல யூடியூப் சேனல் பிரபலம் மதன் கௌரி பெற்றுள்ளார். தினமும் நடக்கும் விஷயங்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை, சுவாரசியம் குறையாமல் ஒரே டேக்கில் அளிப்பதுதான் இவரது தனித்தன்மை வாய்ந்த ஸ்டைல். இதற்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த விருதை அவர் பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேடையில் விஜய் டிவி புகழ் உடன் அவர் செய்த கலாட்டாக்கள் இதோ...!

VIDEO : விஜய் டிவி புகழுக்கு சவால் விட்ட மதன் கௌரி... மேடையில் நடந்த கலாட்டா... மிஸ் பண்ணிடாதீங்க..! வீடியோ

மேலும் செய்திகள்

madan gowri challenges pugazh புகழுக்கு சவால் விட்ட மதன் கௌரி

People looking for online information on Behindwoods Gold Icon, Madan gowri will find this news story useful.