Reliable Software
www.garudabazaar.com

“Sir... ஒரே ஒரு Selfie.. ப்ளீஸ்!”.. ஹன்சிகா யார் கிட்ட கெஞ்சுறாங்க பாருங்க! ViralVideo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு என திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் முன்னணி. நடிகர்களுடன் இணைந்து ஹீரோயினாக பல படங்களில் நடித்த ஹன்சிகாவுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

Look at who Hansika request a selfie ஹன்சிகா Video

அவ்வப்போது தம்முடைய சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஹன்சிகா மோத்வானி, தற்போது ஒரு வீடியோவை தம்முடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் செய்துள்ளவை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

ஆம், அப்படி என்ன செய்தார் என்றால் அவர் தன்னுடைய செல்லப் பிராணியான நாய் குட்டியுடன், “சார் ஒரே ஒரு செல்பி சார்!” என்று கெஞ்சுகிறார். ஹன்சிகா கெஞ்சுவது மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். ஒரு வழியாக இறுதியில் அந்த செல்லப் பிராணி நாய் குட்டி ஹன்சிகாவுடன் செல்பி எடுக்க ஒத்துழைத்து விடுகிறது. குறிப்பாக அந்த செல்லப்பிராணி நாய்க்குட்டியின் பெயர் டெடி. எனவே டெடி சார் ஒரு செல்பி? என்று ஹன்சிகா குறிப்பிடுகிறார்.

இதை தம்முடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டும் வருகிறது. இதேபோல் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஷெரின் தம்முடைய செல்ல நாய்க்குட்டியை முத்தம் கொடுத்து கொஞ்சி வீடியோவை பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தன் செல்லப்பிராணி நாய் குட்டியுடன் நேரம் செலவிடும் ஒரு க்யூட்டான வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு லாக்டவுன் சூழலில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் தங்களுடைய செல்லப்பிராணிகள் ஒரு சிறந்த நண்பர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடும் பொழுது சில கடினமான சூழ்நிலைகளை மறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. எனவேதான் இன்னும் பலரும் இப்படி செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“SIR... ஒரே ஒரு SELFIE.. ப்ளீஸ்!”.. ஹன்சிகா யார் கிட்ட கெஞ்சுறாங்க பாருங்க! VIRALVIDEO! வீடியோ

Look at who Hansika request a selfie ஹன்சிகா Video

People looking for online information on Hansika Motwani will find this news story useful.