Reliable Software
www.garudabazaar.com

அதிர்ச்சி!! மரணம்!! பிரபல இயக்குநரின் தந்தையான பழம்பெரும் இயக்குநர் காலமானார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன்.

legendary Tamil director GNR Rangarajan passed away

2009-ஆம் ஆண்டு பிருத்விராஜ், சக்தி, பிரியாமணி மற்றும் பலர் நடித்து வெளியான  நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய ஜிஎன்ஆர் குமரவேலன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலான இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு வெளியான வாகா திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். விக்ரம் பிரபு இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.   இதேபோல் அருண் விஜய் நடிப்பில் குமரவேலன் சினம் படத்தையும் இயக்கியுள்ளார்.

இவரது தந்தையும் இயக்குநர் தான். கமல்ஹாசன் நடிப்பில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜிஎன் ரங்கராஜன் என்பவர் தான் ஜிஎன்ஆர் குமரவேலனின் தந்தை. இயக்குநர் ஜிஎன் ரங்கராஜன் தான் தற்போது உயிரிழந்துள்ளார்.

முன்பு தந்தை பற்றி குறிப்பிட்ட, GNR குமரவேலன், “எனது தந்தை எடிட்டர் துரை சிங்கம் அவர்களிடம் உதவியாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இயக்குநர் பீம்சிங் அவர்களின் படங்களுக்கு தீவிர விசிறியாக இருந்தார். இயக்குநர் திரு SP முத்துராமன் அவர்களுடன் அசோஸியேட்டாக பல வருடங்கள், 25 படங்களுக்கும் மேலாக பணிபுரிந்தார். அவற்றில் புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை, ப்ரியா மற்றும் மேலும் பல படங்கள் குறிப்பிடதகுந்தவை. இந்த காலகட்டத்தில் நடிகர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமல்ஹாசன் ஆகியோரிடம் மிகச்சிறந்த நட்பை பேணினார்.

legendary Tamil director GNR Rangarajan passed away

அந்த காலகட்டத்தில் அவர் இருவரிடமும் கால்ஷீட் பெற்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்த் அவர்களும், கமல்ஹாசன் அவர்களும், இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார்கள். அவர் கமல்ஹாசன் அவர்களை வைத்து ‘கல்யாணராமன்’ எனும் மிகப்பெரும் ஹிட் படத்தை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் மீண்டும் கோகிலா, கடல் மீண்கள் மற்றும் மகராசன் உட்பட 9 படங்கள் இணைந்து பணியாற்றினார். அவையனைத்துமே  சில்வர் ஜூப்லி படங்கள். பின் அவர் “ராணி தேனி” படம் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அந்த படத்திற்காக கமல்ஹாசன் அவர்கள் சம்பளமே வாங்கவில்லை. நான் திரையுலகில் உதவி இயக்குநராக அறிமுகமான படம் கூட இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “சதிலீலாவதி” திரைப்படம் தான்.

legendary Tamil director GNR Rangarajan passed away

GN.ரங்கராஜன் மகராசன் திரைப்படத்திற்கு பிறகு திரை இயக்கத்தை கைவிட்டார். அதன் பின் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கிய அவர்,  தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் “ரகுவசம்” எனும் முதல் மெகா சீரியலை இயக்கினார். சிங்கப்பூர் சேனலுக்காக ஒரு டெலிஃபிலிமையும் இயக்கினார்.

அது அவருக்கு பெருமளவில் பாராட்டுக்களையும், புகழையும் பெற்று தந்தது. திரை உலகத்தில் எண்ணற்ற கலைஞர்களுக்கு, அவர் தூண்டுகோலாக இருந்துள்ளார் திரைத்துறை மீதான அவரது அர்ப்பணிப்பும், காதலும் அழியவேயில்லை. சமீபத்தில் ரிலீஸாகும் படங்களையும், சீரிஸ்களையும், இசையையும் அவர் ரசித்து மகிழ்கிறார்.” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமது தந்தை இறப்பு குறித்து தமது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன், “என் தந்தை .. என் வழிகாடி.. இன்று காலை 8.45am.. நாங்கள் பலமாக உங்கள் பிரார்த்தனைகள் தேவை..” என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தான் பழம்பெரும் இயக்குநர் மோகன் காந்தி ராமன், பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் உள்ளிட்டோர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: “பயமா இருக்கு!!”.. விலகும் மற்றுமொரு சீரியலின் முக்கிய நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

legendary Tamil director GNR Rangarajan passed away

People looking for online information on GNR.Kumaravelan will find this news story useful.