மீண்டும் இயக்குநராகும் 'குட்டிப்புலி' நடிகர் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 12:06 PM
'குட்டிப்புலி' படத்தில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் சரவண சக்தி. இவர் 'மருது', 'சண்டக்கோழி 2', 'கொடிவீரன்', 'தர்மதுரை' போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தார்.

தற்போது 'மாமனிதன்', 'அடுத்த சாட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குநரான சரவண சக்தி 'தண்டாயுதபாணி', ஜே.கே.ரித்தீஸ் நடித்த 'நாயகன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் சமீபத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்த 'பில்லா பாண்டி' படத்தை இயக்கியிருந்தார். இதனையடுத்து அவர் தற்போது முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : Kutty puli, Saravana Sakthi