அடேங்கப்பா இதுதான் உலகத்துலயே ரொம்ப காஸ்ட்லியான Dress-ஆ..? இவ்வளவு கோடிக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > சினிமா செய்திகள்அமெரிக்காவைச் சேர்ந்த மாடலும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியன், மெட் கலா ஆடை அலங்கார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை தான் தற்போது டாக் ஆஃப் த டவுன்.
Also Read | இரவின் நிழல்: A.R. ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய மனதை மயக்கும் பாட்டு.. எப்படி இருக்கு?
மெட் கலா 2022
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஆடை அலங்கார கண்காட்சியான மெட் கலா ஃபேஷன் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சினிமா நட்சத்திரங்கள், மாடல் துறையை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வது வழக்கம். நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்த ஆடை அலங்கார நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிம் காதர்ஷியன், புகழ்பெற்ற மர்லின் மன்றோவின் உடையை அணிந்திருந்தார். இது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மர்லின் மன்றோவின் ஆடை
மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவிற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய மன்றோ 1962 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடி கலந்துகொண்ட நிதிதிரட்டும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். கனமான வெள்ளை நிறத்தினாலான ஓவர்கோட் அணிந்திருந்த மன்றோ மேடையில் ஏறியதும் தனது ஓவர்கோட்டை கழற்றினார்.
உள்ளே முழுவதும் கையால் சிறப்பு கற்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக ஆடையை அணிந்திருந்தார் மன்றோ. இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜீன் லூயிஸ் தயாரித்திருந்தார். அன்றுமுதல் அந்த ஆடையும் பிரபலமானது.
ஏலம்
15,000 பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் கென்னடியின் பிறந்தநாள் அடுத்த 10 நாட்களில் வருவதை முன்னிட்டு "ஹேப்பி பர்த்டே பிரசிடெண்ட்" எனப்பாடி அனைவரையும் திகைக்க வைத்தார் மன்றோ. அவருடைய மறைவிற்கு பிறகு இந்த ஆடை விலைமதில்லா சொத்தாக கருதப்பட்டது. இதன் காரணமாகவே 2016 ஆம் ஆண்டு மன்றோவின் அந்த ஆடை ஏலத்திற்கு வந்தபோது அதனை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் அந்த ஆடை 4.81 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 36.8 கோடி ரூபாய்) ஏலம் போனது.
இந்நிலையில் இந்த ஆடையைத்தான் கிம் காதர்ஷியன் தற்போது மெட் கலா விழாவிற்கு அணிந்துவந்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
அடேங்கப்பா இதுதான் உலகத்துலயே ரொம்ப காஸ்ட்லியான DRESS-ஆ..? இவ்வளவு கோடிக்கு அப்படி என்ன ஸ்பெஷல்? வீடியோ