வெளியானது KGF 2 படத்தின் டீசர்... ராக்கி பாய் இந்த முறை இன்னும் அதிரடியாய் இறங்கிட்டாரு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட படமான கே.ஜி.எப் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று கொண்டாடப்படும் யஷ் இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார். கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த இந்தப் படம் கோடிக்கணக்கில் வசூலித்தது.

KGF 2 movie teaser got released வெளியானது KGF 2 படத்தின் டீசர்

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால்  படப்பிடிப்பு முடங்கியது. தற்போது லாக்டவுன் நிலை சற்று தளர்த்தப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி வருகிறது.

வெளியானது KGF 2 படத்தின் டீசர்... ராக்கி பாய் இந்த முறை இன்னும் அதிரடியாய் இறங்கிட்டாரு..! வீடியோ

Tags : KGF2

KGF 2 movie teaser got released வெளியானது KGF 2 படத்தின் டீசர்

People looking for online information on KGF2 will find this news story useful.